Pages

Friday, July 31, 2026

A limitless musical continuum

A limitless musical continuum.


இளையராஜா அவர்கள் தனது இசையை தனித்தனி வடிவங்களாகவோ, ராகங்களாகவோ, genre-களாகவோ, Carnatic / Western / Hindustani என்ற பிரிவுகளாகவோ பார்ப்பதில்லை. மாறாக, அதை ஒரு தொடர்ச்சியான, பிரிக்க முடியாத இசைப் பெருவெளியாகவே (Musical Continuum) உணர்கிறார் என்றே எனக்குத் தோன்றுகிறது. இதையே சிலர் Musical Universe, நாத பிரம்மம் என்றும் குறிப்பிடுகின்றனர்.


நாம் உருவாக்கியிருக்கும் ராகங்கள், scale-கள், genre-கள், இசை வடிவங்கள் ஆகியவை அந்த எல்லையற்ற இசைப் பெருவெளியை நமது புரிதலுக்காக வகைப்படுத்திக் கொள்ளும் அறிவியல் மற்றும் அழகியல் கட்டமைப்புகள். ஆனால் அவை இசையின் முழுமையான இயல்பை முழுவதுமாக வரையறுப்பவை அல்ல.


இந்த இசைத் தொடர்ச்சியிலிருந்து ஒரு குறிப்பிட்ட உணர்வு, ஓட்டம், வடிவம், அழகியல் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து, சுமார் நான்கரை நிமிடங்கள் கொண்ட ஒரு முழுமையான இசைப் பயணமாக வெளிப்படுத்துவதுதான் இளையராஜாவின் படைப்பாற்றல் செயல்முறை என்று எனக்குத் தோன்றுகிறது.


இதுவே அவரது படைப்பாற்றலின் மிக முக்கியமான தனிச்சிறப்பு. படைப்பாற்றல் என்பது தனித்தனி இசைக் கூறுகளை ஒன்றுசேர்ப்பது அல்ல; எல்லையற்ற தொடர்ச்சியிலிருந்து (from a limitless continuum) ஒரு அர்த்தமுள்ள பகுதியை (a momentary separation)  வெளிக்கொணர்வது. அதனால்தான் அவரது இசையில் எல்லைகள் கரைந்து, பல இசை உலகங்கள் எந்த ஒரு அதீத முயற்சியும் இல்லாமல் இயல்பாக ஒன்றோடொன்று உரையாடுகின்றன.


இந்தக் கோணத்தில் பார்க்கும்போது, "How to Name It?" என்ற தலைப்பும் ஒரு ஆழமான தத்துவச் சுட்டிக்காட்டாக எனக்குத் தோன்றுகிறது. ஒரே தொடர்ச்சியான உண்மையாக அனுபவிக்கப்படுகிற ஒன்றை, மனிதர்கள் உருவாக்கிய பெயர்களாலும் வகைப்பாடுகளாலும் முழுமையாக அடையாளப்படுத்த முடியுமா என்ற கேள்வியை அது எழுப்புகிறது.அதனால் தான் இளையராஜா அவர்கள் அப்படி அதை "How to name it" என்று வினவுகிறார்.


"நாதமே பரம்பொருள்; பரம்பொருளே நாதமாக வெளிப்படுகிறது" என்று நமது மரபு கூறுகிறது. அந்த நாதத்தை ஒரு படைப்பாளியாக ஆழ்ந்து அனுபவித்து, அதிலிருந்து அரிய இசை வடிவங்களைச் செதுக்கி, நமக்காகத் தாயன்புடன் இசையாக வழங்குவதில்தான் இளையராஜாவின் மேதைமை இருக்கிறது. That's his genius at work


 ! 


.

No comments:

Post a Comment