Pages

Wednesday, July 15, 2026

இசை எங்கிருந்து வந்தது?

 

இசை எங்கிருந்து வந்தது?

இளையராஜா அவர்கள் பல மேடைகளில் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறார்:

«"இந்தப் பாடல் எனக்குத் தோன்றுவதற்கு முன்பு எங்கிருந்தது?"»

(Where was this song before it appeared to me?)

இந்தக் கேள்வி இசையைப் பற்றியது மட்டுமல்ல.

இதை இப்படியும் கேட்கலாம்:

«மகா மேதைகள் எவ்வாறு உருவாகிறார்கள்?»

அல்லது,

«அவர்கள் தங்களை எவ்வாறு உருவாக்கிக் கொள்கிறார்கள்?»

Genius என்ற பார்வையில் இதற்கு ஒரு சுவாரஸ்யமான விளக்கம் இருக்கிறது.

1. எல்லாம் ஆர்வத்தில் (Curiosity) தொடங்குகிறது

இளையராஜா போன்ற ஒரு மேதையின் பயணம் அறிவில் தொடங்குவதில்லை; அது தீராத ஆர்வத்தில் தொடங்குகிறது.

"இசையில் இன்னும் என்ன இருக்கிறது?"

"இன்னும் என்ன புதிதாக உருவாக்கலாம்?"

"இன்னும் என்ன அழகை வெளிக்கொணரலாம்?"

என்கிற ஓயாத தேடல்.

இது சாதாரண ஆர்வமல்ல. அவரது வாழ்நாள் முழுவதும் அணையாத ஒரு தாகம்.

2. இந்த தீராத ஆர்வத்தை வழிநடத்துவது அவரின் ஒப்பற்ற ரசனை (Aesthetic Sensibility)

ஆர்வம் எதைத் தேட வேண்டும் என்று சொல்லும்.

ரசனைதான் எது மதிப்புமிக்கது என்று காட்டும்.

ஒரே இசையை ஆயிரம் பேர் கேட்கலாம். ஆனால் சிலருக்கு மட்டும்தான் அதன் நுண்ணிய அழகுகள் பிடிபடும்.

ஒரே ராகத்தை ஆயிரம் பேர் கற்கலாம். ஆனால் சிலருக்கு மட்டும்தான் அதன் உள் உணர்வு திறக்கும்.

இந்த அசாதாரணமான ரசனைதான் ராஜா போன்ற மேதைகளின் மிகப்பெரிய மூலதனம்.

3. இதற்கு பிறகு வருவயது முழுமையான மூழ்கடிப்பு (Obsession)

மேதைகள் தங்களுக்குப் பிடித்தமான ஒரு விஷயத்தில் தங்களின் மனம், உடல், ஆன்மா என ஒவ்வொரு நொடியையும் முழுமையாக மூழ்கடித்து விடுகிறார்கள்.

இது வெறும் ஆர்வம் அல்ல.

இது கட்டுக்கடங்காத ஆழ்மன ஈடுபாடு.
.

இசையில் ராஜா சாரிடம் இருந்த ஆழ்ந்த தேடல் இதை போன்றது.

ஒரு கட்டத்தில் இசை அவருக்குப் பிடித்த ஒரு விஷயமாக இல்லாமல், அவருடைய இருப்பின் ஒரு பகுதியாகவே மாறிவிடுகிறது.

4. அடுத்தது Saturation: மூளை இசையால் நிரம்பும் நிலை

இசையின் விதிகள், இலக்கணம், ராகங்கள், தாளங்கள், நாட்டுப்புற இசை, கர்நாடக இசை, மேற்கத்திய இசை, இசைக்கோர்ப்பு, வாத்திய அமைப்புகள்...

இவற்றை ஓயாமல் உள்வாங்குவதன் மூலம் மூளை ஒரு பிரம்மாண்டமான தகவல் வலையமைப்பை உருவாக்குகிறது.

இது வெறும் தகவல் சேகரிப்பு அல்ல.

ஒரு கலை துறையின் உலகமே மூளைக்குள் குடியேறிவிடும் நிலை.

இதை Saturation என்பார்கள்.

5. Compression: விதிகளின் சுருக்கம்

ஆரம்பத்தில் இசை என்பது ஆயிரக்கணக்கான விதிகளின் தொகுப்பாகத் தோன்றும்.

ஆனால் நீண்டகால உள்வாங்கலுக்குப் பிறகு மூளை அவற்றைச் சுருக்கத் தொடங்குகிறது.

இதுதான் Compression.

ஒரு குழந்தை முதலில் எழுத்துக்களைப் பார்க்கிறது.

பிறகு வார்த்தைகளைப் பார்க்கிறது.

அதன்பின் நேரடியாக அர்த்தத்தைப் புரிந்துகொள்கிறது.

அதேபோல் இசை மேதைகள் தனித்தனி நோட்ஸ்களைப் பார்ப்பதில்லை.

அவர்கள் இசைக் கட்டமைப்புகளையும், உணர்வுகளையும், முழு இசை உலகங்களையும் பார்க்கிறார்கள்.

ஆயிரக்கணக்கான தகவல்கள் சில உள்ளார்ந்த வடிவங்களாக (Mental Structures) சுருங்கிவிடுகின்றன.

6. Internalization: விதிகளே மனிதனாக மாறுவது

ஒரு கட்டத்தில் இசை விதிகள் மனப்பாடமாக இருப்பதில்லை.

அவை சிந்தனை அமைப்பாகவே மாறிவிடுகின்றன.

ராஜா சார் இசையை நினைத்து இசையமைப்பதில்லை.

அவரது சிந்தனையே இசையாக மாறிவிடுகிறது.

விதிகள் வெளியே இருப்பதில்லை.

அவை அவருக்குள்ளேயே வாழத் தொடங்குகின்றன.

7. Neural Rewiring: மூளையின் மறுகட்டமைப்பு

தொடர்ச்சியான Saturation மற்றும் Compression மூளையின் நரம்பியல் இணைப்புகளை மாற்றத் தொடங்குகின்றன.

புதிய இணைப்புகள் உருவாகின்றன.

பழையவை இன்னும் வலுவடைகின்றன.

தகவல்கள் மிக வேகமாக ஒன்றோடொன்று பேசத் தொடங்குகின்றன.

ஒரு கட்டத்தில், இசையைப் பொறுத்தவரை அவரது மூளை சாதாரண மனிதர்களின் மூளையிலிருந்து முற்றிலும் மாறுபட்டு இயங்குகிறது.

8. Subconscious Parallel Processing

இதற்குப் பிறகுதான் உண்மையான மாயம் தொடங்குகிறது.

தகவல்களால் நிரம்பிய மேல்மனம் அவற்றை ஆழ்மனத்திடம் ஒப்படைக்கிறது.

மேல்மனம் நேர்க்கோட்டாக (Linear) சிந்திக்கிறது.

ஆனால் ஆழ்மனம் ஆயிரக்கணக்கான தொடர்புகளை ஒரே நேரத்தில் ஆராயும் ஒரு பேரலல் பிராசஸிங் (Parallel Processing) அமைப்பாக செயல்படுகிறது.

ராஜா சார் சொல்வது போல:

«"தூங்கும்போது கூட என் நெஞ்சில் கை வைத்து ஆர்மோனியம் போல வாசித்தேன்."»

அவரது ஆழ்மனம் அவர் தூங்கும் நேரத்திலும் வேலை செய்துகொண்டே இருந்தது.

9. Incubation: அமைதியில் நிகழும் படைப்பு

வெளியில் எதுவும் நடக்காதது போலத் தெரியும்.

ஆனால் உள்ளே வேலை நடந்துகொண்டே இருக்கும்.

நாம் தூங்கும்போது.

நடக்கும்போது.

அமைதியாக அமர்ந்திருக்கும்போது.

ஆழ்மனம் புதிய தொடர்புகளை உருவாக்கிக் கொண்டே இருக்கும்.

அதனால்தான் ஒரு பிரச்சினைக்கு இரவு முழுவதும் யோசித்தும் தீர்வு கிடைக்காமல் போகலாம்.

ஆனால் காலையில் விழித்தவுடன் பதில் திடீரென்று பளிச்செனத் தோன்றும்.

10. Ego Quieting: "நான்" பின்வாங்குதல்

ஒரு கட்டத்தில் மேல்மனம் அமைதியாகி, "நான் செய்கிறேன்" என்ற உணர்வு பின்செல்கிறது.

அகந்தை தற்காலிகமாக விலகுகிறது.

ஆழ்மனம் முன்னணிக்கு வருகிறது.

இந்த நிலையில்தான் பல படைப்பாளிகள்:

«"நான் உருவாக்கவில்லை."»

«"இது எங்கிருந்தோ வந்தது."»

என்று சொல்கிறார்கள்.

அது வெறும் கவித்துவமான வார்த்தை அல்ல.

அவர்களுடைய உண்மையான அனுபவம்.

அந்தப் படைப்பு அவர்களுக்கு தாங்கள் உருவாக்கியது போலத் தோன்றுவதில்லை.

தங்களுக்கு வழங்கப்பட்ட ஒரு வரம் போலவே உணரப்படுகிறது.

11. Insight: முழுப் பாடலும் ஒரே கணத்தில் தெரிவது

இங்கேதான் மேதைகளின் மிகப்பெரிய அதிசயம் நிகழ்கிறது.

அவர்கள் தனித்தனி நோட்ஸ்களைச் சேர்க்காமல், முழுப் பாடலையும் ஒரே நேரத்தில் உணர்கிறார்கள்.

இதை Macro-Spatial Representation என்பார்கள்.

ஒரு கட்டிடக் கலைஞர் முழுக் கட்டிடத்தையும் மனக்கண்ணில் காண்பது போல.

ஒரு சதுரங்க மேதை முழுப் பலகையையும் ஒரே பார்வையில் பார்ப்பது போல.

ராஜா  என்ற இசை மேதை முழுப் பாடலையும் பார்க்கிறார்.

12. Creation: பாடல் பிறக்கும் தருணம்

அதன்பிறகு வெளிவருவது வெறும் எழுதும் வேலைதான்.

உண்மையான படைப்பு ஏற்கனவே உள்ளே நடந்து முடிந்துவிட்டது.

அதனால்தான் முழுப் பாடலும்—அதன் நோட்ஸ், கார்ட்ஸ், இசைக்கோர்ப்பு, வாத்திய அமைப்பு, உணர்ச்சி என எல்லாமும்—ஒரு பிரெட் டோஸ்டரிலிருந்து டோஸ்ட் வெளியே குதிப்பது போல, முழுமையாகவும் கச்சிதமாகவும் வெளிப்படுகிறது.

அதனால்தான் ராஜா சார் சொல்கிறார்:

«"நான் இசை அமைக்க உட்காரும்போது என் மனது அமைதியாகிவிடும். ஒரு Pure ஆன இடத்தில் இருந்து பாடல் பிறக்கும்."»

பிறகு மீண்டும் கேட்கிறார்:

«"இந்தப் பாடல் எனக்குத் தோன்றுவதற்கு முன்பு எங்கிருந்தது?"»

அந்தப் பாடல் வெறுமனே வானத்தில் மிதந்துகொண்டிருக்கவில்லை.

அது பல தசாப்தங்களாக அவரது ஆர்வத்தில், ரசனையில், தேடலில், மூழ்கடிப்பில், உள்வாங்கலில், சுருக்கத்தில், நரம்பியல் மாற்றத்தில், ஆழ்மன செயலாக்கத்தில் மெதுவாக உருவாகிக் கொண்டிருந்தது.

ஜீனியஸ் என்றால் என்ன?

ஜீனியஸ் என்பது ஒரு அமானுஷ்ட அதிர்ஷ்டப் பரிசோ அல்லது மாயாஜாலமோ அல்ல.

அது ஒரு விஷயத்தின் மீது மனிதன் கொள்ளும் அளவற்ற ஆர்வம், தீராத ரசனை, முழுமையான மூழ்கடிப்பு மற்றும் நீண்டகால உள்வாங்கலின் இறுதி விளைவு.

ஒரு கட்டத்தில் அந்த ஈடுபாடு மூளையின் உயிரியல் அமைப்பையே மாற்றிவிடுகிறது.

அதன் விளைவாக உருவாகும் புதிய நரம்பியல் கட்டமைப்பைத்தான் நாம் "ஜீனியஸ்" என்று அழைக்கிறோம்.

«Genius is not extraordinary intelligence alone.

Genius is a transformed neural architecture.»

ஆர்வம் → ரசனை → தேடல் → மூழ்கடிப்பு → Saturation → Compression → Internalization → Neural Rewiring → Subconscious Processing → Incubation → Ego Quieting → Insight → Creation

அதுவே இசையாக வெளிப்பட்டால் நாம் அதை ஒரு பாடல் என்கிறோம்.

அதுவே கணிதமாக வெளிப்பட்டால் ஒரு கோட்பாடு என்கிறோம்.

அதுவே இயற்பியலாக வெளிப்பட்டால் ஒரு கண்டுபிடிப்பு என்கிறோம்.

ஆனால் அடிப்படையில் இயங்கும் அந்த உள் இயந்திரத்தின் செயல்முறை ஒன்றுதான்.

அதுதான் நமது இசை மேதையின் ஆழ்  மன உள் இயந்திரம். Internal Engine 🎼🧠✨

Genius !


-- Vels MP

No comments:

Post a Comment